எம்மைப் பற்றி

விடய வரம்பும் செயற்பாடுகளும்

நோக்கெல்லை

பாரிய-பொருளாதாரக் கொள்கைகள், வருடாந்த வரவு செலவுத் திட்டம் மற்றும் ஒதுக்கீட்டுச் சட்டங்கள், பொது நிதி முகாமைத்துவம், உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சேமிப்பு மற்றும் முதலீடுகள், பொதுக் கடன்கள், நிதி மற்றும் காப்பீட்டு நடவடிக்கைகள், சர்வதேச நிதிக் கூட்டுறவு தொடர்பான மற்றும் சமூகப் பாதுகாப்பு மற்றும் பொருளாதார அபிவிருத்தி நடவடிக்கைகளை நெறிப்படுத்துதல் தொடர்பான பொறுப்புகள்.

விடயதானங்கள் மற்றும் செயற்பாடுகள்

1. சம்பந்தப்பட்ட ராஜாங்க அமைச்சுக்களுக்கு கொள்கை வழிகாட்டுதல்களை வழங்குதல், பரிந்துரைக்கப்பட்ட சட்டவிதிகள், சட்டங்கள் மற்றும் கட்டளைச் சட்டங்களுக்கு இணங்க நிதி தொடர்பான கொள்கைகளை உருவாக்குதல், தேசிய வரவு செலவுத் திட்டம் , அரச முதலீடு மற்றும் தேசிய அபிவிருத்தி திட்டத்தின் கீழ் கருத்திட்டங்களை செயல்படுத்துதல் மற்றும்  அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்தப்படும் தேசியக் கொள்கைகளின் அடிப்படையிலும்,“செழிப்பு மிக்க மற்றும் சிறப்பான காட்சிகள்” கொள்கைக் கூற்றுக்களுக்கிணங்கவும் "மக்கள் மையப் பொருளாதாரத்தை" உருவாக்குவதற்காக, கீழே குறிப்பிடப்பட்டுள்ள திணைக்களங்கள் அரச நிறுவனங்கள் மற்றும் நியதிச் சட்ட நிறுவனங்களின் விடயதானங்கள் மற்றும் செயல்பாடுகள் தொடர்பான கொள்கைகள்,  நிகழ்ச்சித் திட்டங்கள் மற்றும் கருத்திட்டங்களை உருவாக்குதல், செயல்படுத்துதல், கண்காணித்தல் மற்றும் மதிப்பீடு செய்தல்.

2.வறுமையை ஒழிப்பதற்கும், பொருளாதார மறுமலர்ச்சிக்கும் ஜனாதிபதி செயலணியின் ஊடாக அனைத்து அமைச்சுக்களுடனும் ஒருங்கிணைந்து அபிவிருத்தி நடவடிக்கைகளை நேரடியாக மேற்கொள்ள வசதிகளை வழங்குதல்.

சிறப்பு முன்னுரிமைகள்

          1. 1. அனைவருக்கும் நன்மைகளைப் பகிர்ந்தளிக்கும் விதத்திலும், அனைத்து மாகாணங்களையும் உள்ளடக்கியதும் மற்றும் வருமான ஏற்றத்தாழ்வுகளைக் குறைக்கும் நிலையான, உயர் பொருளாதார வளர்ச்சி விகிதத்தை நிறுவுதல்.

          2. 2. குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு முன்னுரிமை அளித்து வேலை வாய்ப்பின்மையைக்   குறைத்தல் மற்றும்  தனிநபர் மூலதன  வருமானத்தை அதிகரித்தல்.

          3. 3.வருடாந்த சராசரி பணவீக்க விகிதத்தை குறைந்த மட்டத்தில் பராமரிப்பதன் மூலம் விலை நிலைத்தன்மையை உறுதி செய்தல்.

          4. 4.வரவு செலவுத் திட்டப் பற்றாக்குறை மற்றும் பொதுக் கடனைக் குறைப்பதன் மூலம் பொது வருமானக்  கொள்கைகளில் உள்ள நிச்சயமற்ற தன்மைகளைக் குறைத்தல்.

          5. 5..  குறைந்த மட்டத்தில் கடன் வட்டி விகிதத்தை பராமரிப்பதன் மூலம் நிதி வளங்கள்  மற்றும் பொருளாதார தேவைகளை விரிவுபடுத்துதல்.

          6. 6. ரூபாயின் பரிமாற்றப்  பெறுமதி ஒரு நிலையான அளவில் பராமரிக்கப்படுவதை உறுதி செய்வதற்காக வட்டி விகிதங்கள், நிதி மற்றும் கொடுப்பனவு கொள்கை மீதிகளை நிலைப்படுத்துதல்.

          7. 7. உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை அறிமுகப்படுத்துதல், குறைந்த வருமானம் பெறுபவர்களை மேம்படுத்துதல் மற்றும் முதலீடுகளை ஊக்குவித்தல்.

          8. 8. பொது மக்களுக்கு நன்மைகளை வழங்கும் வகையில் உள்நாட்டு வணிக சமூகத்திற்கான வணிக சூழலை விரிவுபடுத்துதல்.

          9. 9. பொது நிறுவனங்களை வலுப்படுத்துதல்.

          10. 10.அரச வருமானம் மற்றும் செலவினங்களை திறம்பட நிர்வகிப்பதற்கு தேவையான நிறுவன கட்டமைப்பை வலுப்படுத்துதல்.

          11.