கொம்ப்றோலர் நாயகத்தின் அலுவலகம்

பொறுப்புக்கள்

நோக்கங்கள்:

அரசாங்கத்தின் (அரசாங்க நிறுவனங்கள், அரச தொழிற் முயற்சிகள் மற்றும் மாகாண சபைகளும் உள்ளூராட்சி மன்றங்களும்) நிதி அல்லாத சொத்துக்கள் முகாமை:

 

அ.

அனைத்து நிதி அல்லாத சொத்துக்களையும் பதிவு செய்வதற்காக, புதுப்பிக்கப்பட்ட, விரிவான, மையப்படுத்தப்பட்ட தரவுத்தளம் (இணையவழித் தரவுத்தளத்துடன்) மற்றும் ஆதன முகாமைத்துவ முறைமை ஒன்றை நிறுவுதல்.

 

ஆ.

நிதி அல்லாத சொத்துக்களை திறம்பட மற்றும் திறமையாக பயன்படுத்துவதன் மூலம் அரசாங்கத்தின் அபிவிருத்திக் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கான கொள்கைகளை உருவாக்குதல் மற்றும் செயற்படுத்துதல்.

 

இ.

நிதி அல்லாத சொத்துக்களின் மதிப்பை சரியாக அறிக்கையிடுவதை உறுதி செய்தல்.

 

ஈ.

நிதி அல்லாத சொத்துக்களின் நிர்வாகத்தில் தலைமைத்துவம் மற்றும் பாதுகாவலர் பாத்திரத்தை வகித்தல்.

 

அரசாங்க நிறுவனங்களின் மூலதன சொத்துக்களின் விற்பனை மூலம் கிடைக்கும் வருமானத்தை சேகரித்தல்.

 

 

பிரதான பணிகள:

அரசாங்கத்தின் நிதி அல்லாத சொத்துக்கள் முகாமைத்துவம்

 

அ.  அனைத்து நிதியல்லாத சொத்துகள் தகவல்களையும் (தேசிய இருப்புநிலைக் குறிப்பில் மதிப்பீட்டுடன் சொத்துகளைப் பதிவுசெய்ய இயலும்) பதிவுசெய்து அறிக்கையிடுவதற்காக புதுப்பிக்கப்பட்ட விரிவான மையத் தரவுத் தளத்தை (நிகழ்நிலை தரவுத்தளத்துடன்) பராமரித்தல் மற்றும் சொத்து முகாமைத்துவ முறைமை.

 

 

ஆ. நிதியல்லாத சொத்துக்கள் மற்றும் செலவு முகாமைத்துவம் ஆகியவற்றின் உகந்த பயன்பாட்டிற்காக தவறான நிர்வாகம், பொது சொத்துக்களை வீணாக்குதல் மற்றும் பாழாக்குதலை தடுப்பாற்கான கொள்கைகளை உருவாக்குதல் மற்றும் செயற்படுத்துதல்.

 

 

அரச நிறுவனங்களுக்குச் சொந்தமான மூலதனச் சொத்துக்களை விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் வருமானத்திற்கான வருமான கணக்கீட்டு அதிகாரியாகச் செயற்படுதல்.