வர்த்தக மற்றும் முதலீட்டுக் கொள்கைகள் திணைக்களம்

பொறுப்புக்கள்

இலக்குகள்

1. வர்த்தகத்தை ஊக்குவித்தல் மற்றும் தொழில்துறைக்கு நட்பான தீர்வைச் சூழல் ஒன்றைப் பேணுதல்.

2. வர்த்தக குறியீட்டை வசதிப்படுத்துவதற்காக வர்த்தக வசதிப்படுத்தல் தொடர்பான கொள்கையை பேணுதல்.

3. வர்த்தக உடன்படிக்கைகளின் கீழ் போட்டித்தன்மைமிகு வசதியான  தீர்வைச் சூழலை நடைமுறைப்படுத்தல்.

4. அரசாங்கத்தின் பொருளாதார சமூக இலக்குகளை அடைவதற்காக வரிச் சலுகைகளை நடைமுறைப்படுத்தல்.

5. இலங்கையை பிராந்தியத்தின் நேரடி வெளிநாட்டு முதலீட்டுக்கான விருப்பமான ஒர் தளமாக்குவதை ஊக்குவித்தல்.

 

நோக்கங்கள்

1. வர்த்தக ஊக்குவிப்பு மற்றும் கைத்தொழில்துறைக்கு நட்பான துடிப்பான தீர்வைச் சூழலை அடைதல்.

2. முதலீட்டை ஊக்கப்படுத்தாத தீர்வைக் கட்டுப்பாடுகளை நீக்குதல்.

3. ஏற்றுமதித் தயாரிப்புக்கான தற்காலிக இறக்குமதி திட்டத்தினை (TIEP) வலுப்படுத்தல்.

4. சுங்கப் பிணைக்குதக் கொள்கையை வலுவூட்டுதல்.

5. சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சித் துறைக்கான கொள்கையினை தயாரிப்பதற்காக தொடர்புடைய பங்குதாரர்களுடன் கலந்துரையாடலை ஒழுங்குசெய்தல்.

6. சேவை பெறுநர்களுக்குப் பொருத்தமான தரவுத்தளம் ஒன்றின் ஊடாக தேவையான தகவல்களை வழங்கி தொழில்முயற்சியாளர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கல்.

7. அரச துறை உத்தியோகத்தர்களுக்கு சலுகைரீதியான வாகன அனுமதிப் பத்திரம் வழங்குவதனை முறைப்படுத்துதல்.

8. நாட்டின் வர்த்தகப் பொருளாதாரத்தின் சமச்சீரற்ற தன்மைக்குள் பரஸ்பர நன்மைகளை அடிப்படையாகக் கொண்டு சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகளை மேம்படுத்துதல்.

9. உலகளாவிய ரீதியில் சாதகமான வர்த்தகத்திற்கான / கைத்தொழிலுக்கான வாய்ப்பினை வழங்கக்கூடிய சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகளை மேம்படுத்துதல்