பொது கடன் முகாமைத்துவ அலுவலகம்

கடமைகள் மற்றும் செயல்பாடுகள்

கடமைகள்

• அரச கடனை முகாமைசெய்தல்

•  கடன் உத்தரவாதங்களை வழங்குதல் மற்றும் முகாமைசெய்தல்

•  கடன் வழங்கும் செயல்பாடுகள் மீதான முகாமைத்துவம்

•  பொது கடனைப் பதிவு செய்தல் மற்றும் அறிக்கையிடல்

 

செயல்பாடுகள்

நடுத்தர கால கடன் முகாமைத்துவ மூலோபாயம், வருடாந்த கடன் பெறுதல் திட்டம் மற்றும் அரச
  பிணையங்களை வெளியிடுவதற்கான ஏல அட்டவணைகள் ஆகியவற்றைத் தயாரித்தல் மற்றும் 
  வெளியிடுதல்.

நிதி விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் குறித்த பேரம் பேசல், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக்
  கடன் பெறுதல்களை, பிற கடன் ஏற்பாடுகள் மற்றும் அரசாங்கத்தின் கடன் முகாமைத்துவ
  செயற்ப்பாடுகளினை நிறைவேற்றுதல்.

நிதிச் சந்தைகளுக்கான அணுகலை அடைவதற்கும் தக்கவைத்துக் கொள்வதற்கும் அவசியமான
   உறவுகளைப் பேணுதல்.

திறைசேரியின், திறைசேரி செயல்பாடுகள் எனும் விடயத்திற்கு பொறுப்பான திணைக்களத்துடன்
   இணைந்து பண பாய்ச்சல் முகாமைத்துவம் தொடர்பாக கடன் செயல்பாடுகளை ஒருங்கிணைத்தல்.

கடன் தொடர்பான பொறுப்பு முகாமைத்துவ நடவடிக்கைகளைத் தயாரித்தல் மற்றும் நிறைவேற்றுதல்

கடன் இடரினை மதிப்பிடல் மற்றும் கடன் உத்தரவாதங்கள் மற்றும் மீள்கடன் வழங்கல்
  செயல்பாடுகளின் இடர் தணிப்பு ஆலோசனை வழங்குதல்.

பொது கடன், கடன் உத்தரவாதங்கள், மீள்கடன் வழங்கல், வழங்குநர்களின் கடன் மற்றும் நிதி குத்தகை
  ஆகியவற்றை பொது கடன் முகாமைத்துவ சட்டத்திற்கு இணங்க பதிவு செய்தல்,
  அறிக்கையிடுதல், தன்மயமாக்கல் மற்றும் வெளியிடுதல்.

பொது கடன் முகாமைத்துவ சட்டத்திற்கு இணங்க, அரச கடனினை உரிய நேரத்தில் செலுத்துதல்.

அரசாங்கத்தின் தற்போதைய மற்றும் முன் மதிப்பிடப்பட்ட கடன் ஆகிய இரண்டின் அடிப்படையிலும்
   கடன் செலுத்தும் முன் மதிப்பீடுகளை தயாரித்தல்.