பொது படுகடன் முகாமைத்துவ அலுவலகம்

செய்திகள்

> 2025 ஆம் ஆண்டில் முதலீட்டாளர் உறவு நடைமுறைகளில் இலங்கை மிகவும் குறிப்பிடத்தக்க மதிப்பெண் முன்னேற்றத்தினைப் பதிவு செய்தது

> 2024 நவம்பர் 25 முதல் அமுலுக்கு வரும் 2024 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க பொது படுகடன் முகாமைத்துவச் சட்டத்தின் (PDMA) படி, பொது படுகடன் முகாமைத்துவ அலுவலகம் (PDMO) 2024 டிசம்பர் 02 அன்று நிறுவப்பட்டது. (Link)

> பொது படுகடன் முகாமைத்துவச் சட்டத்தின் ஏற்பாடுகளின்படி, பொது படுகடன் முகாமைத்துவ அலுவலகம் 2024 டிசம்பர் முதல் புள்ளிவிவர படுகடன் செய்தித்தாள்களை வெளியிடத் தொடங்கியது. 2024 ஆண்டின் 4 ஆவது காலாண்டிற்கான புள்ளிவிவர படுகடன் செய்தித்தாள் 2025 பிப்ரவரி 28 அன்று வெளியிடப்பட்டது.

> பொது படுகடன் முகாமைத்துவ அலுவலகம், அதன் 2025-2029 ஆம் ஆண்டிற்கான முதலாவது நடுத்தர கால படுகடன் முகாமைத்துவ உபாய மற்றும் 2025 ஆம் ஆண்டிற்கான வருடாந்த கடன்பெறுகை திட்டம் ஆகியவற்றை உத்தியோகபூர்வமாக வெளியிட்டதுடன், இது இலங்கையின் பொது படுகடனை நிர்வகிப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் மேற்கொள்ளும் முயற்சிகளில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது.

> 2025 சனவரி 20 முதல் 29 வரை உள்நாட்டு படுகடன் முகாமைத்துவம் மீதான சர்வதேச நாணய நிதியத்தின் பணி ஒன்று தொடங்கப்பட்டது.

> 2025 மார்ச் 17 முதல் 28 வரை முதலீட்டாளர் உறவுகள் மற்றும் தகவல் தொடர்பாடல் கொள்கைக்கான சர்வதேச நாணய நிதியப் பணி முன்னெடுக்கப்பட்டது.

> 2025 ஆண்டின் முதல் காலாண்டிற்கான காலாண்டு புள்ளிவிவர படுகடன் செய்தித்தாளி​னை 2025 மே 30 அன்று வெளியிட்டது.

> பொது படுகடன் முகாமைத்துவ அலுவலகத்திற்கான நடைமுறை கையேடுகள் குறித்த சர்வதேச நாணய நிதியப் பணி 2025.06.04 அன்று முன்னெடுக்கப்பட்டது.