பொது படுகடன் முகாமைத்துவ அலுவலகம்

பொறுப்புக்கள்

முக்கிய பொறுப்புகள்

* அரசாங்கத்தின் படுகடனை முகாமைசெய்தல்

* கடன் உத்தரவாதங்களை வழங்குதல் மற்றும் முகாமைசெய்தல்

* கடன் வழங்கும் செயல்பாடுகளை முகாமைசெய்தல்

* பொது படுகடனைப் பதிவு செய்தல் மற்றும் அறிக்கையிடல்

பணிகள்

* பின்வருவற்றினை தயாரித்து வெளியிடுதல்

     >  நடுத்தர கால படுகடன் முகாமைத்துவ உபாயம்

     >  வருடாந்த கடன்பெறுகைத் திட்டம்

     > அரசாங்க பிணையங்களின் வழங்களுக்கான ஏலமிடல்​ நாட்காட்டி

* நிதி விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பற்றிய பேச்சுவார்த்தை மற்றும் உள்நாட்டு, வெளிநாட்டு கடன்பெறுகைகளை செயற்படுத்துதல், பிற கடன் ஏற்பாடுகள் மற்றும் அரசாங்கத்தின் படுகடன் முகா​மைத்துவ நடவடிக்கைகள். இருப்பினும், இருதரப்பு மற்றும் பலதரப்பு நிறுவனங்களிடமிருந்து அரசாங்கத்தின் வெளிநாட்டுக் கடன்கள் திறைசேரியின் வெளிநாட்டு வளங்கள் என்ற விடயத்துக்குப் பொறுப்பான திணைக்களத்துடன் ஒருங்கிணைந்து செயற்படுத்தப்படும்.

* நிதிச் சந்தைகளுக்கான அணுகலை அடைவதற்கும் பராமரிப்பதற்கும் தேவையான உறவுகளைப் பராமரித்தல்.

* திறைசேரியின் திறைசேரி செயற்பாடுகள் என்ற விடயத்திற்குப் பொறுப்பான திணைக்களத்துடன் காசுப் பாய்ச்சல் தொடர்பான படுகடன் செயற்பாடுகளை ஒருங்கிணைத்தல்.

* படுகடன் தொடர்பான பொறுப்பு முகாமைத்துவ தொழிற்பாடுகளைத் தயாரித்தல் மற்றும் செயற்படுத்துதல்.

* கடன் இடர் மதிப்பீடு மற்றும் கடன் உத்தரவாதங்கள் மற்றும் கடன் வழங்கும் செயல்பாடுகளின் இடர் குறைப்பு வழிமுறை குறித்த ஆலோசனை.

* சட்டத்தின்படி பொது படுகடன், கடன் உத்தரவாதங்கள், கடன் வழங்குதல், வழங்குநர்களின் கடன் மற்றும் நிதி குத்தகை ஆகியவற்றைப் பதிவு செய்தல், அறிக்கையிடல், பரப்புதல் மற்றும் வெளியிடுதல்.

* இந்தச் சட்டத்தின்படி அரசாங்கத்தின் படுகடனை சரியான நேரத்தில் திருப்பிச் செலுத்துதல்.

* அரசாங்கத்தின் தற்போதைய மற்றும் எதிர்பார்க்கப்படும் படுகடனின் அடிப்படையில் படுகடன் மீள் கொடுப்பனவு முன்னறிவிப்புகளைத் தயாரித்தல்