கடமைகள்
• அரச கடனை முகாமைசெய்தல்
• கடன் உத்தரவாதங்களை வழங்குதல் மற்றும் முகாமைசெய்தல்
• கடன் வழங்கும் செயல்பாடுகள் மீதான முகாமைத்துவம்
• பொது கடனைப் பதிவு செய்தல் மற்றும் அறிக்கையிடல்
செயல்பாடுகள்
• நடுத்தர கால கடன் முகாமைத்துவ மூலோபாயம், வருடாந்த கடன் பெறுதல் திட்டம் மற்றும் அரச
பிணையங்களை வெளியிடுவதற்கான ஏல அட்டவணைகள் ஆகியவற்றைத் தயாரித்தல் மற்றும்
வெளியிடுதல்.
• நிதி விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் குறித்த பேரம் பேசல், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக்
கடன் பெறுதல்களை, பிற கடன் ஏற்பாடுகள் மற்றும் அரசாங்கத்தின் கடன் முகாமைத்துவ
செயற்ப்பாடுகளினை நிறைவேற்றுதல்.
• நிதிச் சந்தைகளுக்கான அணுகலை அடைவதற்கும் தக்கவைத்துக் கொள்வதற்கும் அவசியமான
உறவுகளைப் பேணுதல்.
• திறைசேரியின், திறைசேரி செயல்பாடுகள் எனும் விடயத்திற்கு பொறுப்பான திணைக்களத்துடன்
இணைந்து பண பாய்ச்சல் முகாமைத்துவம் தொடர்பாக கடன் செயல்பாடுகளை ஒருங்கிணைத்தல்.
• கடன் தொடர்பான பொறுப்பு முகாமைத்துவ நடவடிக்கைகளைத் தயாரித்தல் மற்றும் நிறைவேற்றுதல்
• கடன் இடரினை மதிப்பிடல் மற்றும் கடன் உத்தரவாதங்கள் மற்றும் மீள்கடன் வழங்கல்
செயல்பாடுகளின் இடர் தணிப்பு ஆலோசனை வழங்குதல்.
• பொது கடன், கடன் உத்தரவாதங்கள், மீள்கடன் வழங்கல், வழங்குநர்களின் கடன் மற்றும் நிதி குத்தகை
ஆகியவற்றை பொது கடன் முகாமைத்துவ சட்டத்திற்கு இணங்க பதிவு செய்தல்,
அறிக்கையிடுதல், தன்மயமாக்கல் மற்றும் வெளியிடுதல்.
• பொது கடன் முகாமைத்துவ சட்டத்திற்கு இணங்க, அரச கடனினை உரிய நேரத்தில் செலுத்துதல்.
• அரசாங்கத்தின் தற்போதைய மற்றும் முன் மதிப்பிடப்பட்ட கடன் ஆகிய இரண்டின் அடிப்படையிலும்
கடன் செலுத்தும் முன் மதிப்பீடுகளை தயாரித்தல்.