|
நோக்கங்கள்: | ||
|
அரசாங்கத்தின் (அரசாங்க நிறுவனங்கள், அரச தொழிற் முயற்சிகள் மற்றும் மாகாண சபைகளும் உள்ளூராட்சி மன்றங்களும்) நிதி அல்லாத சொத்துக்கள் முகாமை: |
| |
|
அ. |
அனைத்து நிதி அல்லாத சொத்துக்களையும் பதிவு செய்வதற்காக, புதுப்பிக்கப்பட்ட, விரிவான, மையப்படுத்தப்பட்ட தரவுத்தளம் (இணையவழித் தரவுத்தளத்துடன்) மற்றும் ஆதன முகாமைத்துவ முறைமை ஒன்றை நிறுவுதல். |
|
|
ஆ. |
நிதி அல்லாத சொத்துக்களை திறம்பட மற்றும் திறமையாக பயன்படுத்துவதன் மூலம் அரசாங்கத்தின் அபிவிருத்திக் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கான கொள்கைகளை உருவாக்குதல் மற்றும் செயற்படுத்துதல். |
|
|
இ. |
நிதி அல்லாத சொத்துக்களின் மதிப்பை சரியாக அறிக்கையிடுவதை உறுதி செய்தல். |
|
|
ஈ. |
நிதி அல்லாத சொத்துக்களின் நிர்வாகத்தில் தலைமைத்துவம் மற்றும் பாதுகாவலர் பாத்திரத்தை வகித்தல். |
|
|
அரசாங்க நிறுவனங்களின் மூலதன சொத்துக்களின் விற்பனை மூலம் கிடைக்கும் வருமானத்தை சேகரித்தல். |
| |
|
பிரதான பணிகள்: | ||
|
அரசாங்கத்தின் நிதி அல்லாத சொத்துக்கள் முகாமைத்துவம் |
| |
|
அ. அனைத்து நிதியல்லாத சொத்துகள் தகவல்களையும் (தேசிய இருப்புநிலைக் குறிப்பில் மதிப்பீட்டுடன் சொத்துகளைப் பதிவுசெய்ய இயலும்) பதிவுசெய்து அறிக்கையிடுவதற்காக புதுப்பிக்கப்பட்ட விரிவான மையத் தரவுத் தளத்தை (நிகழ்நிலை தரவுத்தளத்துடன்) பராமரித்தல் மற்றும் சொத்து முகாமைத்துவ முறைமை.
|
| |
|
ஆ. நிதியல்லாத சொத்துக்கள் மற்றும் செலவு முகாமைத்துவம் ஆகியவற்றின் உகந்த பயன்பாட்டிற்காக தவறான நிர்வாகம், பொது சொத்துக்களை வீணாக்குதல் மற்றும் பாழாக்குதலை தடுப்பாற்கான கொள்கைகளை உருவாக்குதல் மற்றும் செயற்படுத்துதல்.
|
| |
|
அரச நிறுவனங்களுக்குச் சொந்தமான மூலதனச் சொத்துக்களை விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் வருமானத்திற்கான வருமான கணக்கீட்டு அதிகாரியாகச் செயற்படுதல். |
| |