பொது கடன் முகாமைத்துவ அலுவலகம்

பொது கடன் முகாமைத்துவ அலுவலகம்

பொது கடன் முகாமைத்துவ அலுவலகம்

பின்னணி

2024 யூன் 18 அன்று அன்று நிறைவேற்றப்பட்டு, 2024 நவெம்பர் 25 அன்று அன்று நடைமுறைக்கு வந்த, 2024 ஆண்டின் 33 ஆம் இலக்க பொது கடன் முகாமைத்துவ சட்டம் (PDMA) இயற்றப்பட்டதைத் தொடர்ந்து, பொது கடன் முகாமைத்துவ அலுவலகம் (PDMO) ஆனது 2024 திசெம்பர் 02 அன்று நிறுவப்பட்டு, தனது செயல்பாடுகளைத் தொடங்கியது.

இது அரச கடன் முகாமைத்துவத்தினை வலுப்படுத்தி ஒருங்கிணைத்து, பொது கடன் தொடர்பான தகவல்களை தன்மயமாக்குவதன் மூலம் பொறுப்புடைமையையும் கடன் வெளிப்படைத்தன்மையையும் மேம்படுத்துவதுடன், இலங்கையின் கடன் பேண்தகைமைக்கும் நீண்டகால நிதி நிலைத்தன்மைக்கும் அவசியமான வினைத்திறன் மற்றும் வெளிப்படையான கடன் வாங்கும் நடைமுறைகள் செயற்படுத்தப்படுவதை உறுதி செய்கின்றது.

 

தொலைநோக்கு

“நம்பகத்தன்மை, வினைத்திறன் மற்றும் வெளிப்படைத்தன்மைக்காக அறியப்பட்டு, உலக அரங்கில் பொதுக் கடன் முகாமைத்துவத்திற்கு ஒரு முன்மாதிரியாகத் திகழ்வது”

 

செயல் இலக்கு

“இலங்கையின் பொருளாதார மற்றும் நிதி நோக்கங்களுக்கு இணங்க அரசாங்கத்தின் கடன் தேவைகளை மூலோபாயரீதியாக செயல்படுத்தல்  மற்றும் மேற்பார்வை செய்வதுடன், நிதிச் செலவுகளைக் குறைப்பது, மற்றும் சரியான அளவில் மதிப்பீடு செய்யப்பட்ட இடரினை உறுதி செய்வதும் ஆகும்”

 

நோக்கங்கள்

நிதிநிலை தேவைகளையும் கடன் செலுத்தும் பொறுப்புக்களையும் உரிய நேரத்தில் நிறைவேற்றுதல்.

சரியான அளவில் மதிப்பீடு செய்யப்பட்ட இடரினோடு இணைந்தவாறான  நடுத்தர மற்றும் நீண்ட
   காலத்திற்கு இயன்றளவு குறைந்த செலவில் கடன் பெறுதல்.

உள்நாட்டுக் கடன் பிணையங்கள் சந்தையின் வளர்ச்சிக்கு ஊக்கமளித்தல்